சிங்கப்பூரில் தமிழர்களுக்கு தனி அடையாளம்கொடுத்த தலைமகனின் நினைவஞ்சலி தினம்!

சிங்கையின் தந்தை #லீ_குவான்_இயூ அவர்களுக்கு வீரவணக்கம் !

இலங்கை,இந்திய அரசுகள் தமிழ் மொழிக்கு கொடுக்க மறுத்த ஆட்சி மொழித் தகுதியை கொடுத்தவர் லீ குவான் இயூ. தமிழ் மொழிக்கு உலக அரங்கில் அடையாளம் தேடித் தந்தவர். சிங்கப்பூரின் அஞ்சல்தலை நாணயங்களில் தமிழ் மொழிக்கு இடமளிக்க செய்தவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தவர். #இனப்படுகொலை_செய்த_இராஜபக்சேவை இந்திய தலைவர்கள் யாரும் கண்டிக்க முன்வராத நிலையில் அவனை ஒரு அரக்கன் , தமிழின விரோதி என்பதை உலகிற்கு உரக்கச் சொன்னவர்.

இலட்சக் கணக்கான தமிழர்களை சிங்கப்பூர் நாட்டில் தலை நிமிர்ந்து வாழச் செய்தவர். சிங்கப்பூர் என்னும் சிறிய ஊரை உலகமே வியக்கும் நாடாக மாற்றிக் காட்டிய லீ குவான் இயூ அவர்களுக்கு உலகத் தமிழர்கள் வீர வணக்கத்தை உரித்தாக கடமைப்பட்டுள்ளோம் ..
Powered by Blogger.