வடக்கில் காலநிலை எச்சரிக்கை!

நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, புத்தளம், குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்பத்துடனான காலநிலை நிலவும். இது குறித்து மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் அதிக நீரை பருகுமாறும் நிழலான இடங்களில் தரித்திருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக, இதுவரை யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.