"காங்கேசன்துறை பகுதியில் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க முயற்சி"!!

காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ராஜபக்ஷ் அரண்மனையை மையமாகக்கொண்டு மேலும் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்றுறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,  புனிதத்தலங்கள் அமைந்திருக்கும் இந்த பிரதேசத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் நில அபகரிப்புக்கு இடமளிக்கமாட்டோம். அத்துடன் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்க தயாராக. அவ்வாறு இல்லாமல் எமது புனித பிரதேசங்கள் அமைந்திருக்கும் நகுலேஸ்வர, கீரிமலை பிரதேசங்களை எந்த விலைகொடுத்தேனும் நாங்கள் பாதுகாப்போம். எந்த சந்தர்ப்பத்திலும் எமது நிலங்களை விட்டுக்கொடுக்க இடமளிக்கமாட்டோம் என்றார்.

No comments

Powered by Blogger.