புகையிரத சேவையால் வருடத்துக்கு 6 பில்லியன் ரூபா நஷ்டம்!!

இலங்கை விமானப்படைகென்ற தனி விமானநிலையத்தை அமைக்க ஜனாதிபதி -பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.  மேலும் இன்று இலங்கை புகையிரத சேவை வருடமொன்றுக்கு 6 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை  எதிர்நோக்குகின்றது. எனினும் பொதுமக்களுக்கு சேவையினை செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் அரசாங்கம் இந்த சுமைகளை தாங்கிக்கொண்டு செயற்பட்டு வருகின்றது. எனினும் புகையிரத சேவையில் மேலும் சிறப்பான வகையில் மக்களை சிரமப்படுத்தாத வகையில் செயற்பட வேண்டும். நான் அமைச்சராக இருந்த நேரத்தில் 200 புகையிரத பெட்டிகளையும் 12 சிறப்பு புகையிரத எஞ்சின்கள் புதிதாக பாவனைக்கு விடுத்தேன். இன்று அதனை கொண்டே அரசாங்கம் சேவைகளை வழங்கி வருகின்றது என்றார்.  பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டத்தில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, துறைமுகங்கள் கப்பற்துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 
Powered by Blogger.