உணர்வு இழந்த வாழ்வை மீளப்பெறுவதில் படும் வேதனை அனுபவ பகிர்வு!!

முள்ளந்தண்டு வடம் காயப்பட்டு நெஞ்சுப்பகுதிக்கு கீழே உள்ள அவயங்கள் உணர்வினை இழந்த நிலையில் படுத்த படுக்கையிலே காலம் கரைந்தது.

இழந்த வாழ்வை மீழப்பெற முடியாதென்று தெரிந்து இருக்கும்  வாழ்வை  தக்க வைக்கவென ராகமை புணர்வுத்தாபன வைத்தியசிலையில் பிசியோதரப்பி சிகிச்சை பெற சென்ற இடத்தில் கால் எலும்பு உடைந்து காலில் கம்பி வைத்து  சத்திர சிகிச்சை செய்தபின்னர் சக்கர நாற்காலியில் இருக்க முடியாமல் மீண்டும் கட்டிலிலே முடங்கியபோது எனக்கு ஆறுதல் தந்த கட்டில் போன்ற வடிவமைப்பைக் கொண்ட  இந்த வண்டி.

குப்புறப் படுத்துக் கிடந்து முன்னுக்கு இருக்கும் இரு சக்கரங்களையும் சுழற்றுவதன் மூலம் இதனை நகர்த்த முடியும்.

 காலை முதல் மாலை வரை இதிலேதான் மருத்துவமனை வளாக விடுதிக்குள் எங்கு வேண்டுமானாலும் இதிலேதான் செல்வேன்.

 இதிலே படுத்திருந்து தான் உடுப்பு துவைப்பேன் அத்தோடு சாப்பாடு சாப்பிட்டு விட்டு இருந்த இடத்தில் இருந்து கழுவாமல் தண்ணீர்ப் பைப் இருக்கும் இடத்திற்கு சென்றே     சாப்பாட்டு பீங்கானை கழுவுவேன்.

ஆரம்பத்தில் இந்த நீள வாகனத்தை இயக்க  அதாவது சந்து பொந்து போன்ற இடங்களில் திருப்பி எடுக்க சிரமப்பட்டேன் இரண்டு மூன்று மாதமளவில் சிறப்பாக கையாள தேர்சி பெற்றிருந்தேன்.

மதிய நேரம்  மருத்துவமனை விடுதிக்குள் இருக்க முடியாத வெய்யில் காலத்தில் முதலை கரையில் வந்து வெய்யில் குளிப்பதைப்போல நான் வெளியே வந்து இப்படி படுத்திருந்து இளைப்பாறுவேன்.

பல சமயம் மதிய நேரம் வெளியிலே வந்து  படுத்திருந்து இதிலேதான் நித்திரை கொள்வேன்.
ஆறு மாதங்கள்     மறக்க முடியா அனுபவம் வலியோடு கூடிய சுகமான அனுபவங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.