அங்கஜன் கிளிநொச்சிக்கு விஜயத்தின் மர்மம் என்ன?!!

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட செருக்கன் பிரதேச மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது செருக்கன் பகுதியில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகள், குடிநீர் பிரச்சினை, விவசாயம், செருக்கன் குளம் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த பிரதேசத்தில் உள்ள குளத்தினை அபிவிருத்தி செய்வதில் முன்னிலை படுத்துவதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். எனவே உங்கள் பிரதேசத்திற்கான குளம் முன்னிலை அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்படும். ஜனாதிபதி இவ்வாறான திட்டங்களில் அதிக ஆர்வம் செலுத்துகின்றார். மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் அதிக அக்கறையுடன் ஜனாதிபதி செயற்படுகின்றார். மக்களிற்கு வரும் அபிவிருத்திகளை யாராலும் தடுக்க முடியாது.

அவ்வாறான அபிவிருத்திகள் இடம்பெறும் போது எவறேனும் தடுத்தால் நான் உங்களுடன் இருப்பேன். இது மக்களிற்கான அபிவிருத்தி. பளை பகுதியில் தென்னிலங்கை கம்பனி ஒன்றே காற்றாலையை அமைத்துள்ளனர். அந்த கம்பனி ஊடக வருடாந்தம் அப்பிரதேசத்தின் அபிவிருத்திக்காக நிதி கிடைக்கின்றது. அந்த நிதியில் பல்வேறு அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

 இந்நிகழ்வின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் ஆனோல்ட், சயந்தன் ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் உயிரச்சுறுத்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் ஒருவர் கேள்வி எழுப்பியதினை தொடர்ந்து இவ்வாறு பதிலளித்துள்ளார். உண்மையில் இவர்களிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனல்டின் மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்தி அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அச்சுறுத்தல் தொடர்பில் சிலரை அவர்கள் சாடுகின்றனர்.

அவர் மீது அச்சுறுத்தல் விடுப்பதாக இருப்பின் அவரது மனைவிக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டியதில்லை. நேரடியாக அவருக்கே விடுக்கப்படும். எனவே அது அவர்களின் குடும்ப பிரச்சினையாக இருக்கலாம். ஆனாலும் உயிர் அச்சுறுத்தலிற்கு உள்ளான அவர்கள் பாதுகாப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்.


 எஸ். ரி. எப் பாதுகாப்பு பெறுவதனால் அவர்கள் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.