தமிழகத்தில் 8 லட்சம் புதிய வாக்காளர்கள்!


தமிழகத்தில் 8 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று(மார்ச் 26) கூறுகையில், தமிழகத்தில் 8 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி 95 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. இன்றைக்கு அவர்கள் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும். ஆனால், இவர்களுக்கு உடனடியாக வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கப்படாது. தேர்தல் ஆணையம் அறிவித்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவித்தார். தேர்தல் ழபழக ஈடுபடக் கூடிய 3.5 லட்சம் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில், 7 முதல் 8 சதவிகித ஊழியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை. இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ளாத ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 3.5 லட்சம் ஊழியர்கள் தேர்தலின்போது பணியில் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 64,000 ராணுவ அதிகாரிகளும், போலீசார்களும் தபால் மூலம் வாக்களிப்பார்கள் என தெரிவித்தார். 2014ஆம் ஆண்டு தேர்தலை விட நடப்பு தேர்தலில் புதிய வாக்காளர்கள் 30 சதவிகிதம் குறைவு. 2014ஆம் ஆண்டு தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 81 கோடி. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 90 கோடி. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 10.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால், 18-19 வயதிலுள்ள முதல் முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டு தேர்தலில் 2 கோடியே 50 லட்சமாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சமாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் சராசரியாக ஒரு தொகுதிக்கு 20,512 புதிய வாக்காளர்கள் இருக்கின்றனர்.

No comments

Powered by Blogger.