மாவை சேனாதிராசா வாயால் வடை சுட்ட கதை யாருக்கு தெரியும்!

செய்திகளாக மக்களை ஒன்று திரட்டி நச்சுக் குண்டு வீசப்பட்டதா? எமக்கு உண்மை தெரிய வேண்டும். இல்லையேல் சர்வதேரீதியில் அழத்தம் பிரயோகிப்போம் என்று பாராளுமன்றத்தில் மாவை சேனாதிராசா பேசியுள்ளார்.

கடந்த பத்து வருடத்தில் ஏன் இதனை மாவை சோனாதிராசா கேட்கவில்லை? இப்போது ஏன் கேட்கிறார்?

தனக்கு 5 கோடி ரூபா சொகுசுவாகனம் கேட்டு வாங்கியபோது இதனைக் கேட்டிருக்கலாமே?

அல்லது, தனது மாவிட்டபுரத்து சொகுசு பங்களாவை அரசிடமிருந்து பெற்று திருப்பிகட்டிய போது கேட்டிருக்கலாமே?

அல்லது, அந்த சொகுசு பங்களாவுக்கு உயர்ந்த மதில்கள் கட்டுவதற்காக கருங்கல்களை இறக்குமதி செய்தபோதாவது கேட்டிருக்கலாமே?

அல்லது, பிரதேசபை உறுப்பினராக தனது மகனை நியமித்த போதாவது கேட்டிருக்கலாமே?

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதுபோல் தேர்தல் வரும் பின்னே மாவையாரின் அறிக்கை வரும் முன்னே என்பதா?

கடந்த தேர்தலில் ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்று கூறி ஏமாற்றியவர்கள் இந்த தேர்தலுக்கு ஏதாவது கூறி மக்களை ஏமாற்றலாம் என நினைக்கின்றனர்.

சிலரை பல காலம் ஏமாற்றலாம். பலரை சில காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது.

அதேபோன்று இனி மாவை சேனாதிராசா போன்றவர்களால் எல்லா தமிழ் மக்களையும் ஏமாற்ற முடியாது என்பதே உண்மை.

ஏனெனில் இதுவரை மாவை சேனாதிராசா சுட்ட வடை எல்லாம் வாயால் சுட்ட வடைகள் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.

குறிப்பு- நாயாற்றில் அரசால் செய்யப்படும் சிங்கள குடியேற்றத்தை மாவை சேனாதிராசா எதிர்க்கிறார். ஆனால்  இந்த சிங்கள குடியேற்றத்திற்கு நிதி ஒதுக்கும் பட்ஜட்டை இந்த மாவை சோனாதிராசா ஆதரிக்கிறார். இப்போது கூறுங்கள் தமிழ் மக்களை ஏமாற்றும் இவரை என்ன செய்யலாம்?

No comments

Powered by Blogger.