தனது ஐந்து நாள் குழந்தையை விற்பனை செய்த கொடூர தந்தை!!

மாத்தறையில் தனது ஐந்து நாள் குழந்தையை மதுபானம் வாங்குவதற்கு பணம் இல்லாததால் குழந்தையை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்த தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இந்த சம்பவம் திக்வெல்ல பிரதேசத்தில் நடைபெற்றதுடன் குறித்த குழந்தை அயலவர்களுக்கே விற்பனை செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த பிரியந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செயப்பட்டுள்ளார். திக்வெல்ல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments

Powered by Blogger.