அபுதாபி உலக விசேட ஒலிம்பிக் போட்டியின் வெற்றியாளர்கள் கெளரவிப்பு!!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற மாற்றுத் திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுக் கொண்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த திங்களன்று இடம்பெற்றது.


பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதக்கங்களை பெற்றுக் கொண்ட வீரர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவினால் கௌரவிக்கப்பட்டனர்.

இம்மாதம் 14 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை அபுதாபி விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற உலக விசேட ஒலிம்பிக் போட்டியில் 190 நாடுகளைச் சேர்ந்த 7500 வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

குறித்த விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட வீரர்கள் இரண்டு தங்கப்பதக்கம் மற்றும் 4 வெள்ளிப்பதக்கம் உள்ளடங்கலாக 6 பதக்கங்களை பெற்றுக் கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, கடந்த காலங்களில் இந்த வீரர்கள் சமூக மட்டத்தில் புறக்கணிக்கப்பட்டு இருந்தனர். இந்த விசேட தேவையுள்ள வீரர்களால் நாட்டுக்குகௌரவம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கமைய எதிர்காலத்தில் அவர்களை ஊக்கப்படுத்தி விசேட திட்டம் வகுத்து செயல்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், வீரர்களின் பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.