மட்டக்களப்பு ஷேன் பாலர் பாடசாலை சிறார்களின் இல்ல விளையாட்டு போட்டி !

மட்டக்களப்பு ஷேன்  பாலர் பாடசாலை சிறார்களின் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள்  பாடசாலை அதிபர் திலினி  குஷாந்த்  தலைமையில் மட்டக்களப்பு பாட்டாளிப்புரம் மைதானத்தில் சனிக்கிழமை 02ம் திகதி பிற்பகல்   நடைபெற்றது.


கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயல்பட்டு மகிழ்வோம் என்ற செயல்பாட்டின் கீழ் சிறார்களின் விளையாட்டு    நிகழ்வுகள்  இடம்பெற்றதுடன் ,வெற்றிப்பெற்ற சிறார்களுக்கு  பரிசில்களும் சான்றிதள்களும் வழங்கப்பட்டன

இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி செயலாற்றுப் பணிப்பாளர் எஸ் .சசிகரன்  , மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் மட்டக்களப்பு ஷேன்  பாலர் பாடசாலையின் பணிப்பாளர் கிறிஸ்டின் சுஜித் ,ஆகியோர்  கலந்துகொண்டனர் .

இவ் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் பாடசாலை சிறார்கள் மற்றும் சிறார்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.