சர்வதேச நீதிப்பொறிமுறை இறையாண்மையை பாதிக்காது!!
சர்வதேச நீதிப்பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதால், இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வட.மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், சர்வதேச நீதிப்பொறிமுறையை உள்நாட்டில் நடைமுறைப்படுத்த அரசமைப்பில் சிக்கல்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய சட்டத்தில் முன்புபோல நாட்டில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் ஏனைய நாடுகள் அது தொடர்பான கருத்துக்களையோ அல்லது சட்டநடவடிக்கைகளை எடுக்கமுடியாது என கூறமுடியாதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு இல்லையென்றால் ஐ.நா. மனித உரிமைகள் எனும் பேரவை இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது அதை அறியாத சர்வதேசம், தற்போது என்ன நடந்தது என்பதை அறிய கலப்பு நீதிமன்றத்தினூடாக தீர்வு காண வேண்டுமென வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை