வெள்ளைநிற வேன் அப்போது கூட எம்மிடமில்லை–கோத்தாபாய!!

வெள்ளைவேன் கலாசாரம்  பயங்கரவாத செயற்பாடுகள்  முன்னெடுக்கப்பட்டதாக கூறுவதில் உண்மையில்லை. அந்த காலப்பகுதியில் வெள்ளை நிறத்தில் ஒரு வேன் கூட எம்மிடமில்லை   என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய  ராஜபக்ஷ தெரிவித்தார். 


உடுநுவர  பிரதேசத்தில் ஹேலிய அமைப்பினர் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவா யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர வேண்டிய கட்டாயம் எமக்கு காணப்பட்டது. மறுபுறம் பாதாள குழுவினரது செயற்பாடுகளும் அதிகரித்த வண்ணமே காணப்பட்டது. 

இந்நிலையில் சர்வதேச  நாடுகள் எவ்வாறு பயங்கரவாத யுத்தத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க அதனையே   நாங்களும் முன்னெடுத்தோம்.  இதன் பொழுது பல்வேறு  குற்றச்சாட்டுக்கள்  முன்வைக்கப்பட்டது.

வெள்ளைவேன் கலாச்சாரம் என்பது பயங்கரவாத செயற்பாடுகளின் போது  முன்னெடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படுகின்றது. இக்காலக்கட்டத்தில்  எங்களிடம் வெள்ளை நிறத்திலான வேன்கள் ஏதும் காணப்படவில்லை என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.