ஜெனிவாவில் நீதி கேட்டு கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் இடம்பெற்ற பேரணி!

ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் 39ஆவது கூட்டத் தொடர் நடை­பெற்­று­வரும் வேளையில் இன்று திங்­கட்­கி­ழமை ஜெனி­வாவில் ஆர்ப்­பாட்டப் பேர­ணி ஏற்பாடு செய்யப்பட்டது, இவ் பேரணி சற்று முன்னர் ஆரம்பமானது.
தமிழின அழிப்பிற்கு இனிமேலும் தாமதிக்காது நீதியை பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி- ஜெனீவாவிலுள்ள ஐ.நா தலைமையகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் இன்று 04.03.2019 திங்கட்கிழமை அணியெனத் திரண்டு கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தினர்.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு முன்னதாக ஜெனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள பூங்காவில் இருந்து ஐ.நா. தலைமையகம் வரையில் கண்டனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

சுவிஸர்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள பூங்காவில் திரண்ட புலம்பெயர் தமிழர்கள், அங்கிருந்து ஐ.நா தலைமையகம் வரையான கண்டனப் பேரணியை இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பித்தனர். இதில் குழந்தைகள், சிறுவர்கள்,பெண்கள், வயோதிபர்கள் என அனைத்து வயதினரும்கலந்து கொண்டிருந்ததுடன், தமிழ் மக்களுக்கு நீதி கோரி பல கோசங்களையும் எழுப்பினர்.

குறிப்பாக தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டு வருவது தொடர்பிலும் தமது கவலைகளையும் ஆத்திரங்களையும் கண்டனப் பேரணியில் கலந்து கொண்ட மக்கள் வெளிப்படுத்தினர்.

தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்காவின் சிங்கள அரசுகளினால் திட்டமிட்டு பல தசாப்தகாலமாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப் படுகொலைதொடர்பில் முழுமையான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்றும், ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசு தொடர்ந்தும் தவறி வருவதால், தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட போர் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பிலான விசாரணைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்குப்பாரப்படுத்துமாறு கோரியும் குறித்த எழுச்சிப்போராட்டம் இடம்பெற்றது .No comments

Powered by Blogger.