இலட்சிய நெருப்பாகும் ஈழப்பெண்.!

பெண்கள் பூப்போன்றவர்கள்
மென்மையானவர்கள்
அன்பின் சுவடுகளிடையே
ஓடும் ஆனந்த நதி போன்றவர்கள்

பெண்கள் புயல் போன்றவர்கள்
அழிவின் முடிவிலாச் சக்கரம் அவரே
ஆக்கத்தின் அசையாத விருட்சமும் அவரே
அன்பெனும் ஆலயத்தின் அசையாத தெய்வங்களும் அவரே

பெண்கள் ஆணின் அரைப் பாகமென்பர் சிலர் இல்லை ஆணும் ஆண்தன் இயக்கமும் பெண்ணே
ஆணும் ஆண்தன் படைப்பும் பெண்ணே

பெண்ணின் உயர்ரக அழகு சாதனம் புன்னகை
பெண்ணின் அழிக்க முடியா அழிவு ஆயுதம் கண்ணீர்

பெண்ணை புன்னகைக்க வைக்கும் ஆண் தேவனாகிறான்
பெண்ணை கண்ணீரில் கரைக்கும் ஆண்
தேய்ந்து போகிறான்

புதினமாய்ப் பார்த்தால் பெண் தினமும் புதினமே நாளும் புதியவளே

புதியவளாகவும் இனியவளாகவும் கனியவளாகவும் வேறு வேறு அவளளாகவும் பெண் பெரும் பெயரை உடையவள்

பெண்ணுக்கு எங்கு சுதந்திரம் கிடைக்கிறதோ அந்த மண்ணுக்கே சுதந்திரம் கிடைக்கிறதென்போம்

பெண்களின் உரிமை மீறப்பட்டால் மண்ணின் மகத்துவம் மாண்பு கெடுமென்போம்

பெண்ணில்லா இலக்கியமில்லை பெண்ணில்லா ஆணில்லை பெண்ணில்லா உலகமில்லை பெண்ணில்லா இன்பமில்லை பெண்ணில்லா இயக்கமில்லை பெண்ணில்லா எதுவுமில்லை

தாயில்லா நீ யில்லை
நானில்லை

இப்படிச் செப்பியபடியிருக்கலாம் பெண்ணின் புகழை புதுமையை  புரட்சியை

வாத்தியார் பள்ளியில் அடித்தவலி வீடு வந்து அம்மாவிடம் சொல்லியழ அம்மாவின் வருடலில் ஓடிப்போகும் வலி யாவும்

மனதை வாட்டும் துயரை அம்மாவிடம் பகிர்ந்து விட ஓடிப் போகும்
அம்மா தரும் சோற்றுப் பருக்கையில் தேனீர்க் குவளையில் அதற்கான காத்திருப்பில் துயர் கலைந்து போகும்

விவசாயி ஒருவன் வயலில் நெல்லு வெட்ட களைத்து விழுந்து மனைவி  பரிமாறும் உணவிலும் உதிரத்திலும் அன்பொழுகும் அதைப் பார்ப்பவர் மனங்களிலும் ஏக்கம் தாவும்

காதலியின் ஒற்றைப் பார்வையில் ஓராயிரம் புதுச் சிறகுகள் ஒட்டிக் கொள்ளும் பின் அப்பார்வையைப் பற்றிய மடையன்கூட மகாத்மா ஆகிறான் மன்னனாகிறான்

உலகின் ஒப்பற்ற இயற்கை அழகு யாவையும் கொண்டவள் பெண்
 பெண்ணை ரசிப்போன், நேசிப்போன், பூசிப்போன் ,வாசிப்போன் ,சுவாசிப்போன் உலகின் உண்மை வாழ்வை வாழ்பனே

மதிக்கும் பெண்ணை மிதிப்பவன் மிருகத்தின் மலத்தைப் புசிப்பவன்

பூப்போன்ற பெண்ணை கசக்குபவன் குடி ஏழேழு சென்மமும் அழுந்தி அழிந்து போகும்

அவன் வீடும் நாடும் சுடுகாடாகும் கண்ணகி எரித்த மதுரை போல் பாஞ்சாலி அழித்த பாரதம் போல்

ஈழத்தின் நிலையும் அவ்வாறே

எந்த ஒரு பாஞ்சாலியைக் கதறக் கதற மானபங்ககப் படுத்தினரோ கௌரவர்கள் பின்னர் அவர்களின் நிலம் சுடுகாடாய் ஆனதை உலகமறியும் அது போல் இசைப்பிரியாக்களை மான பங்கப் படுத்தியவார்களின் நிலமும் சுடுகாடாய்ப் போகும் ஒரு நாளில்

காணாமல் ஆக்கப்பட்ட அப்பாக்களைத் தேடி தமிழர் நிலமெங்கும் ஆயிரக்கணக்கான பெண்பிள்ளைகள் தினம் கண்ணீர் விட்டு அழுபடி சந்தியெங்கும் சிந்திய கண்ணீர் நாளை பெரு நெருப்பாகி காணாமல் ஆக்கியவர்களின் பரம்பரை குடிதோறும் சுடுகாடாக்கும்

சந்தேகத்தின் பேரில் கைதான கணவர்களைத் தேடும் பெண்களின் கண்ணீரும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளைப் பெற்ற தாய்க்குலத்தின் கண்ணீரும் ஒரு நாளில் பெரு நெருப்பாகி காணாமல் ஆக்கியவரின் குடும்பத்தையும் நாட்டையும் சுடுகாடாக்கும் அவர்கள் மாற்ற முடியா நோயினால் அவதிப் படுவர்

எந்த ஒரு சந்திரமதியால் அரிச்சந்திரன் அரசனாகிறானோ
எந்த ஒரு சாவித்திரியால் சத்தியவான் உயிர் பெறுகிறானோ
எந்த ஒரு கண்ணகியால் மதுரை எரிகிறதோ
எந்த ஒரு பாஞ்சாலியால் பாரதம் நெருப்பாகிறதோ
எந்த ஒரு கூனியால் அயோத்தி சுடுகாடாய்ப் போகிறதோ
எந்த ஒரு கிளியோ பற்றாவால் உரோம் இராட்சியம் சரிகிறதோ

அது போல் எல்லாம் சரியும் எல்லாம் எரியும் ஓர் நாளில் அதுவே புத்த பகவானினதும் போதி தர்மரதும் விருப்பமும் கூட

வீர சுதாகரனை விடுதலை செய்வதாக சிறீலங்காவின் சனாதி பதி ஈழ நாட்டில் வைத்தும் சிறீலங்காவில் வைத்தும் வீரசுதாகரனின் பிள்ளைகளிடம் பொய்வாக்குறுதி அளித்தார் ஆனால் இதுவரை விட வில்லை அந்தப் பெண்குழந்தையின் கண்ணீர் இவர்களைச் சும்மா விடாது

குழந்தைகளைப் பெறாமலே உலகில் உள்ள குழந்தையருக்கு அன்னையானாள் அன்னை திரேசா

தனது இளைய வயதின் காதல் நினைவுகளைத் துறந்து விடுதலையைப்பாடிய மாலதி அங்கையற்கண்ணி போன்ற
 வீரப் பெண்களின் வரலாற்றை எந்த எழுத்துக்களால் எழுதி முடித்து விடுவது

போரில் பெண்கள் விடையத்தில் தவறிழைத்த அனைத்துத் தரப்பினரையும் காலம் நின்று நடந்து ஓடிவந்து கொல்லும்

தாயில்லாமல் நான் இல்லை
நீயும் இல்லை

அனைத்துப் பெண்களுக்கும்
மகளிர் தின வாத்துக்கள்
-த.செல்வா-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.