ஜெனிவாவில் இருந்து கோரிக்கை.!! மாணவர்களின் கண்டன பேரணிக்கு வலுச்சேர்க்க!!

எதிர்வரும் 16ம் திகதி வடக்கு கிழக்கு உட்பட அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஒருங்கிணைப்பில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில்
இருந்து யாழ் முற்றவெளி வரையிலான மாணவர்களின் கண்டன பேரணிக்கு அனைவரும் ஆதரவை வழங்கி சர்வதேதத்திற்கு மக்களின் நிலைப்பிட்டினை தெரிவிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் திருமதி லீலாவதி ஜெனிவா முன்றலில் நின்று கேட்டுக் கொண்டார்.

அதாவது எமது தமிழ் மாணவர் சமூகத்தினர் காலம் காலமாக தமது கல்வியுடன் தேசிய போராட்டங்களை ஒழுங்கு செய்து அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் சக்தி படைத்தவர்கள் எனவே தமது கல்வியையும் பொருட்படுத்தாது முழு வீச்சில் எதிர்வரும் 16ம் திகதி போராட்டத்தை ஒழுங்கு செய்து மக்களின் அரசியல் பிரமுகர்களின் சிவில் சமூகத்தினரின் வர்த்தகர்கள் ஊடகவியலாளர்கள் என அனைவரதும் ஒத்துழைப்பினை வேண்டி வருகின்றனர்

எனவே தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து சரியான பொறுப்புக்கூறல் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துதல் மற்றும் இது வரையிலும் எமது இனப் பிரச்சினை தீர்க்கப் படவில்லை என்பது குறித்தும் சர்வதேதத்திற்கு ஒருமித்த குரலில் தெரிவிக்க எமது எதிர் கால சந்ததியினரான மாணவர்களின் போராட்டம் வலுப்பெற ஒன்றிணையுமாறு மிகவும் உரிமையோடும் அன்பாகவும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.