கனடாவும், ஐரோப்பாவும் போயிங் 737 மெக்‌ஸ் விமானங்கள் பற்றி விசாரணை!

அமெரிக்காவை நம்புவதை காட்டிலும் கனடாவும், ஐரோப்பாவும் போயிங் 737 மெக்‌ஸ் விமானங்கள் பற்றி சுயமாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
அமெரிக்க விசாரணையாளர்களின் விமர்சனங்களை தொடர்ந்து இரட்டை கருத்துகளை நம்பாது தாங்களே விசாரணைகளை முடுக்கிவிடுவதற்கு எண்ணியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய மற்றும் கனேடிய கட்டுப்பாட்டு அதிகாரிகள், போயிங் 737 மெக்ஸ் ஜெட்களின் திட்டமிட்ட பாதுகாப்பு மேம்பாடு தொடர்பாக தங்களின் சொந்த விமர்சனங்களை ஆய்வுக்குட்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
போயிங் விமானங்களின் மென்பொருள் மேம்படுத்தல் இரண்டு விமான விபத்துகளுக்கும் காரணமாகியது.
லயன் எயார் 610 ஆம் இலக்க விமானம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலும், எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் 302 ஆம் இலக்க விமானம் இந்த மாதமும் பயணத்தை ஆரம்பித்து சிறிது நேரத்தில் தரையில் மோதி விபத்துக்குள்ளாகின.
எனவே, இந்த மென்பொருள் மேம்பாடு குறித்து கனடாவும், ஐரோப்பாவும் தங்களின் சொந்த விசாரணை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.
போயிங் ஒரு அமெரிக்க நிறுவனம் என்பதன் காரணமாக அமெரிக்க பெடரல் விமான சேவை நிர்வாகத்திற்கு இந்த செயல் ஒரு கண்டனமாக கருதப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.