தனது உயிருக்கு அச்சுறுத்தல் - யாழ்.மாநகர மேயர்!!

தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் பொலிஸ் பாதுகாப்பு வழங்கவேண்டுமென கோரியுள்ளதாக யாழ். மாநகர சபை மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.


யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டிற்குள் கடிதம் மற்றும் அலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதுதொடர்பாக இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும்போதே யாழ்.மாநகர சபை மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ச்சியாக கருத்து வெளியிட்ட அவர், “கடந்த 14ஆம் திகதி வியாழக்கிழமை எனக்கு கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் சயந்தன் மற்றும் ஆர்னோல்ட் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அன்று சாவகச்சேரி இந்துவில் (சயந்தனை) இலக்குவைத்தார்கள். ஆனால் பிழைத்துவிட்டார். இப்பொது உங்களை இலக்கு வைத்துள்ளார்கள். சிறிது நாட்கள் மறைந்திருப்பது நல்லது.

கம்பன் கழக கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என கோரி அதில் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டு, அவர் பொல்லாதவர். மாறியிருப்பது நல்லது. எதிரிகள் பல பேர் கவனம். அங்கேயும் உள்ளனர். லேசாக எடுக்கவேண்டாம் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த்து.

இந்த நிலையில் 16ஆம் திகதி எனது துணைவியாரின் அலைபேசியின் வைபர் செயலிக்கு தகவல் ஒன்று வந்தது. ‘ரெடி’ என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், இரண்டு தவறிய அழைப்புகளும் (மிஸ்ட் கோல்) வந்திருந்தன.

மீள அழைத்தபோது, பதிலளிக்கப்படவில்லை. உடனடியாகவே மூத்த பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்தேன். அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களை அனுப்பி என்னிடம் விபரங்களைப் பெற்றிருந்தார்.

கம்பன் விழாவின் இறுதிநாள் நிகழ்வில் தொடக்கவுரை என்னுடையதாக இருந்தது. அந்த விழாவில் பங்கேற்கவேண்டாம் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன் விளக்கம் என்ன என எனக்குப் புரியவில்லை. எனினும் அன்றைய நிகழ்வில் பங்கேற்க எனக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இதுவரையில் எனக்கு எவரும் எதிரிகள் என இல்லை. அண்மைக்காலமாக மாநகரத்துக்குள் ஏற்பட்ட சில அத்துமீறல்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளால் அச்சுறுத்தல்கள் இருந்தன.

எனக்கு வந்த அச்சுறுத்தலில் நபர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மாநகரத்துக்குள் ஏற்பட்ட அத்துமீறல்களைத் தடுக்க கூடுதலான அக்கறை எடுத்து செயற்படுவதனால் இவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகின்றது“ என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.