அரசியல் களமாக வைத்தியசாலைகளை மாற்ற வேண்டாம்-சுபைர்!!

வைத்தியசாலைகள் அனைத்தும் மக்களுக்கும் சேவையாற்றக்கூடிய புனிதமான இடம். ஆகையால் அரசியல் களமாக அவற்றை மாற்ற வேண்டாமென கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தற்போதைய தலைவரான எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார்.


நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே எம்.எஸ்.சுபைர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற நோயாளர்களுக்கு, ஆறுதலும் அரவணைப்பும் அளித்து அவர்களை மீட்டெடுக்கின்ற புனிதமான இடங்களாக வைத்தியசாலைகள் உள்ளன.
இத்தகைய உன்னத சேவையை புரிந்து கொள்ளாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை அமுல்படுத்துகின்ற ஒரு தளமாக வைத்தியசாலைகளை பயன்படுத்த உள்ளுர் அரசியல்வாதிகள் முனைவது கவலைக்குரிய விடயமாகும்
குறிப்பாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்புக்குரிய இடமாக மாறிவிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வைத்தியசாலையில் மூவினத்தவர்களுக்கும் சிறந்த சேவைகள் வழங்கப்படுகின்றன.
ஆகவே சுகாதாரத்துறையினருக்கும் நோயளிகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் எந்தவொரு அரசியல்வாதியும் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்.
அதனை விடுத்து தங்களது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக வைத்தியசாலைகளை பயன்படுத்த வேண்டாம்” என எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.