தமிழினத்தின் சாபக்கேடாக மன்னாாில் மதவெறியா்கள் நடந்து கொண்ட விதம்,அமைந்தது!!

மன்னாா்- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் அமைக்கப்பட்ட சிவராத்திாி வளைவை மத வெறியா்கள் அகற்றியமை தமிழினத்தை வெட்ககேட்டுக்கும், சாபக்கேட்டுக்கும் உள் ளாக்கியுள்ளதாக இந்துசமய விவகார அமைச்சா் மனோகணேசன் கூறியுள்ளாா்.



திருக்கேதீஸ்வரத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அவர் அனுப்பி வை த்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழர் ஒற்றுமையை கேள்வி க்கும், ஏனைய இனத்தோர் மத்தியில் கேலிக்கும் உள்ளாக்கியுள்ள

இந்நிகழ்வு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. அமைதிக்கு வழிகாட்ட வேண்டிய மதத் தலைவர்கள், வன்முறைக்கு தலைமை தாங்குவதைக் கடுமையாகக் கண்டிக் கின்றேன்.

மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மடு தேவாலயம் தமிழ் கத்தோலிக்கர்களால் பாதுகாக்கப்படும் கத்தோலிக்க தலம் என்பது போன்று, அதே மாவட்டத்தில் அமை ந்துள்ள திருகேதீஸ்வர ஆலயம்,

தமிழ் இந்துக்களால் பாதுகாக்கப்படும் பாடல்பெற்ற இந்து தலம் என்பதும் அறியப்பட வேண்டும். இரு தரப்புகளும், இந்த அடிப்படை உண்மையை புரிந்துக்கொள்ள வேண் டும். இதை மீறும் எந்தவொரு அடாவடி நடவடிக்கையையும் ஒருபோதும்

அனுமதிக்க முடியாது. இன்று சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெற வேண்டும். அதற்குரிய பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். உடைக்கப்பட்ட தற்காலிக வளைவு தூக்கி நிறுத்தப்பட வேண்டும்.

மத வன்முறையில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று மன்னார் பொலிஸ் தலைமையக அதிகாரி இரத்நாயக்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீநாத் பெரேரா,

பிரதி பொலிஸ் மா அதிபர் அபேவிக்கிரம ஆகியோருக்குப் பணிப்புரை விடுத்துள் ளேன். சிவராத்திரியை அடுத்து, விரைவில் திருகேதீஸ்வர ஆலயத்துக்கு நேரடியாக வந்து சகல தரப்பினரிடமும் கலந்து பேசி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப்

பெற்றுக் கொடுப்பேன். திருகேதீஸ்வர ஆலய அறங்காவலர்களிடம் இது தொடர்பாகத் தெரியப்படுத்தியுள்ளேன். என்றுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.