யாழில் பெண்களின் வருமானத்தை அதிகரிக்க கூடிய பயிற்சி நெறிகள்!!

சமூகத்தில் குறைந்த வருமானம் பெறும் பெண்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன், தென்னை சார் கைப்பணி பொருட்களின் பயிற்சி நெறிகள் யாழில் நடைபெறவுள்ளன.


நல்லூர் சட்டநாதர் சிவன் கோவிலடியிலுள்ள “திவ்விய ஜீவன” மண்டபத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9. 30 மணியளவில் தென்னை பயிர்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் வைகுந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

தென்னை பயிர்செய்கை சபையானது குறைந்த வருமானத்தை ஈட்டும் பெண்களுக்கு, வீட்டில் இருந்தவாறே கைத்தொழில் செய்வதன் ஊடாக வருமானத்தை அதிகரிக்கும் வகையில் செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் விளக்குமாறு, துடைப்பம், சிரட்டை அலங்காரம், தென்னோலையிலான கைவேலைகள் என்பவற்றுக்கான பயிற்சி நெறிகளே வழங்கப்படவுள்ளன.

இந்த பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்டு நல்லூர் பிரதேச கற்பகதரு சங்க பெண்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.