ஜனாதிபதி தலைமையில் இலங்கை மன்றத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா!!

இலங்கை மன்றத்தின் 50வது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது.

நாட்டின் சமூக முன்னேற்றத்திற்கு பல்வேறு கற்கைகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்து நடத்திவரும் கல்வி மையமான இலங்கை மன்றம் 1969ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
50 வருட வரலாற்றில் சுயகல்வி சேவையை மிகவும் விரிந்ததொரு தளத்திற்கு கொண்டு வந்த இலங்கை மன்றம் இன்று ஒரு மக்கள் பல்கலைக்கழகமாக இலங்கை சமூகத்தினரின் கல்வி மற்றும் சேவைகளின் தேவைகளை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இலங்கை மன்றத்தின் முன்னோடியான பெட்ரிக் ஈபட் அவர்களின் பெயரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரதான நுழைவாயில் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு திறந்து வைக்கப்பட்டது.
பியோ டிவி சேவையின் "SEE TV"கல்வி தொலைக்காட்சி அலைவரிசையை மக்கள்மயப்படுத்தல் மற்றும் “அரச பணிக்காக” என்ற இணையத்தள தொலைக்காட்சி அலைவரிசையும் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை மன்றத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கேட்போர் கூடமும் ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டது.
மேலும் இலங்கை மன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள"Smart Sri Lanka" தொழில் வழிகாட்டல் நிறுவனத்தின் புதிய அலுவலகமும் ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இவ்வளாகத்தில் இடம்பெற்ற IMART – 2019 புகைப்பட கண்காட்சியையும் ஜனாதிபதி  பார்வையிட்டார்.
மேலும் ஜனாதிபதி அலுவலகத்தின் வெளியீடான''Signature of the Executive'' சஞ்சிகையின் இணையத்தளமும் ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை மன்றத்தில் சிறந்த சேவைகளை வழங்கிய ஊழியர்களை பாராட்டி கௌரவ விருதுகளும் ஜனாதிபதியால் வழங்கிவைக்கப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, ஷாந்த பண்டார, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, இலங்கை மன்றத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் கோங்கஹகே, "Smart Sri Lanka" நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் எரிக் வீரவர்தன ஆகியோரும், வெளிநாட்டு தூதுவர்களும், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.