சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு ’ஏ’ சான்றிதழ்!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு ’ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. வருடத்திற்கு 6க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அதனை வெளியிட்டு வருகிறார். இந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான படம் பேட்ட. இப்படத்தைத் தொடர்ந்து வரும் 29ம் சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாகவுள்ளது.
தியாகராஜா குமாரராஜா இயக்கியுள்ள இப்படத்தில் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், மிஷ்கின், காயத்ரி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார். முதன் முதலாக அடல்ட் படத்தில் நடித்த பெருமையை இப்படத்தின் மூலம் பெற்றுள்ளார். ஆம், இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.