விமானத்தின் கறுப்புப்பெட்டியை தேடும் பணி ஆரம்பம்!
விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப்பெட்டியை தேடும் பணியை மீட்பு பணியாளர்கள் ஆரம்பித்துள்ளனர்.
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து, கென்யாவின் நைரோபிக்கு நேற்று காலை (ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்ட குறித்த விமானம் விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த விமானத்தில் பயணித்த 149 பயணிகள் உட்பட, 8 விமான பணியாளர்களும் உயிரிழந்ததாக நேற்று எத்தியோப்பிய விமான சேவைகள் உறுதிபடுத்தியது.
போயிங் 737 – 8௦௦ மேக்ஸ்’ என்ற இந்த விமானம், கடந்தாண்டு நவம்பரில் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டது. இந்த விமானம் விழுந்து நொறுங்கி, 157 பேர் உயிரிழந்தமை அதிர்ச்சி அளிக்கிறது என எத்தியோப்பிய விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் கென்யாவை சேர்ந்த 32 பேரும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த 9 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் கனடாவைச் சேர்ந்த, 18 பேர், சீனா, அமெரிக்கா, இத்தாலியைச் சேர்ந்தவர்கள் தலா எட்டு பேரும் இந்தியாவை சேர்ந்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் வேறு நாட்டினர் பயணித்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“

.jpeg
)

கருத்துகள் இல்லை