ஹக்கீம் பிரதம விருந்தினர், மஹிந்த சிறப்பு விருந்தினர்!!

பாகிஸ்தானின் 79 ஆவது தேசிய நாளை முன்னிட்டு இலங்கையில் நடத்தப்பட்ட நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார்.


பாகிஸ்தான் தூதரக ஏற்பாட்டில், கொழும்பு கலதாரி விடுதியில் நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட தேசிய நிகழ்வில், மஹிந்த ராஜபக்ஷ சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்ததுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன, ஜி.எல்.பீரிஸ், ஆகியோருக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் அரசதரப்பைச் சேர்ந்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட ஒரு சிலரே இந்நிகழ்வில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த, தனது ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவை வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.