தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஈகைப் பேரொளி முருகதாசன் திடல் யெனீவாவில் அணிதிரள்வோம்.!

தமிழீழத்தில் தமிழின அழிப்பு நிகழ்த்தப்பட்டு ஒரு தசாப்தமாகும் நிலையில், தொடர்ந்தும் கட்டமைப்பு சார் தமிழின அழிப்பு சிறிலங்கா காலணித்துவ அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலிலும், பன்னாட்டு சமூகம் இன்று வரையிலும் இதனை வேடிக்கை பார்த்த வண்ணமே உள்ளது.


தத்தமது பூகோள அரசியல் நலன்களிற்காக  சிறிலங்கா அரசுடன் இணைசேர்ந்து தமிழின அழிப்பை  நிகழ்த்தி, அதனூடாக தமிழர்கள் சுயாதீனமாக நிர்வகித்து வந்த தமிழீழ நிழல் அரசை இல்லாதொழித்த வல்லாதிக்க சக்திகள், இன்று அங்கு நிகழ்த்தப்பட்ட  தமிழின அழிப்பை மூடிமறைக்கும் செயற்பாடுகளை செவ்வனே அரங்கேற்றி, சிறிலங்கா அரசினை அனைத்துலக விசாரணைப்பொறிமுறைகளிலிருந்து தொடர்ந்தும் காப்பாற்றி வருகின்றனர்.

தமிழின அழிப்பிலிருந்து எம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் நாம் முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமென முலாம் பூசி அதனை அழித்தவர்களும் இச் சர்வதேசமே!!!!!

எமது ஆயுத போராட்டத்தைக் கைவிட்டால் தமிழர்களிற்கான அரசியல் தீர்வினை வழங்குவோமென உறுதிமொழி கூறியவர்களும் இவர்களே !!!!!

இன்று இவர்கள் முன் நிராயுதபாணிகளாகவும் நிற்கதியாகவும்  தமக்கான தீர்வை எதிர்பார்த்து நிற்கும் எம் இனத்தின் குறைந்த பட்ச பாதுகாப்பைக்கூட இவர்களால் உறுதிசெய்ய முடியவில்லை.

அத்துடன் இச் சர்வதேசம் தொடர்ந்தும் தனது பொறுப்பிலிருந்து தவறிச் செல்வதுடன்  சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புசார் இனவழிப்பிற்கு உடந்தையாக செயற்பட்டு வரும் இந் நிலையில் ஈழத் தமிழர்களாகிய நாம், எமது தனி நாட்டிற்கான இறையாண்மை கோரிக்கையையும், அதனை சனநாயக ரீதியல் வெளிப்படுத்துவதற்கான சர்வசன பொது வாக்கெடுப்பையும் வலியுறுத்தி எமது அரசியலை முன் நிறுத்த வேண்டியது மிக மிக அவசியமாகும்.

இதற்கான மூலோபாயத் திட்டங்களை ஆராய்ந்து அதனை கட்டங்கட்டமாக தமிழர் இயக்கம் செயற்படுத்தி வருகின்றது.

எனவே இத்தகைய சூழலில் எமது மக்களின் வெகுசன ரீதியான தன்னெழுச்சி போராட்டங்களானது எமது இலக்கை நோக்கிய போராட்டத்திற்கு வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

எனவே, எம் அன்பிற்குரிய தமிழீழ மக்களே! எதிர் வரும் 04.03.2019 அன்று யெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் முன் அமைந்துள்ள ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் பி.ப 2 மணிக்கு அனைவரும் எழுச்சியோடு ஒன்று திரண்டு ஒற்றுமையாய் எமது தேசிய வேணவாவை சர்வதேசத்திற்கு இடித்துரைப்போம் வாரீர் !!!!!

நன்றி
தமிழர் இயக்கம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.