மண்ணில் சிக்கிக்கொண்ட திருவாரூர் ஆழித்தேர்!
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. தெற்கு வீதியில் தேர் சென்றபோது சாலையோர மண்ணில் சிக்கிக்கொண்டது.
திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் பங்குனி உத்தர திருவிழாவுக்குப் பிறகு, ஆழித்தேரோட்டம் நடப்பது வழக்கம். அதைப்போல் இன்று காலை 5 மணிக்கு திருவாரூர் சந்நிதி தெரு எதிரே அமைந்துள்ள விநாயகர் தேர் முதலில் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.
இதைத் தொடரந்து 7 மணியளவில் தேரடியிலிருந்து ஆழித்தேரோட்டம் தொடங்கியது. அங்கிருந்து புறப்பட்ட தேர் பக்தர்களின் கரகோஷங்களுடன் இழுத்து வரப்பட்டது. கீழ வீதியிலிருந்து தெற்கு வீதியை நோக்கி நகர்ந்து வந்த வேளையில் எதிர்பாராமல் சாலையை விட்டு கீழே இறங்கியது. தியாகராஜர் ஆழித்தேர் அதிக எடையுடன் இருப்பதால் சாலையின் மண்ணில் புதைந்தது.
மண்ணில் புதைந்துள்ள சக்கரங்களை வெளியே கொண்டுவதற்காக எந்திரங்களுடன் கோயில் நிர்வாகிகளும் பக்தர்களும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேரின் அருகிலிருந்த பக்தர்கள் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை