சீனாவில் பூத்துக் குலுங்கும் வசந்த கால பூந்தோட்டங்கள்!

சீனாவின் வசந்த காலத்தை அலங்கரிக்கும் விதமாக பல பாகங்களில் பழந்தரும் மரங்களும் பூந்தோட்டங்களும் பூத்துக் குலுங்குகின்றன.
குறிப்பாக மேற்கு சீனாவில் பேரிக்காய், இலந்தை பழம், பெயர்ஸ் போன்ற பழத் தோட்டங்களும் பூப் பூக்க ஆரம்பித்துள்ளன.

முழு வசந்த காலத்திலும் இவ்வாறு பரந்து விரிந்து பூக்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம். தன்னாட்சி பிராந்தியமான வட மேற்கு ஷின்ஜியாங் உய்கர் பகுதியில் அமைந்துள்ள ரியான்ஷன் மலையடிவாரத்தில், வௌ்ளை குங்குமப் பூக்கள் மலர்ந்துள்ளமை கண்கொள்ளாக் காட்சியாகவுள்ளது.

இளவேனிற் காலத்தின் குளிர்காலநிலை தனிந்து வரும் நேரத்தில் வசந்த காலத்தின் தொடக்கம் மற்றும் விடுமுறை காலம் என்பன சுற்றுலாப் பயணிகளை பெரிதும் உற்சாகப்படுத்துகின்றன.

பூத்துக் குலுங்கும் மலர் சோலைகளை காண்பதற்காக சீனாவின் பல பாகங்களிலிருந்தும், வௌிநாடுகளில் இருந்தும் பலர் இங்கு படையெடுக்கின்றனர். பனிப்பொழிவுகளில் உறைந்துபோகும் மலர் இதழ்கள் இந்த பகுதிக்கு தனித்துவமான ஔிப்படம் போன்ற அழகிய காட்சியை உருவாக்குகின்றன

ஷின்ஜியாங்கில் உள்ள வௌ்ளை குங்குமப் பூக்கள் சீனாவிற்கே உரிய தாவர இனமாகும். பெரும்பாலான மலர் வகைகள் கஷகஸ்தானில் இருந்து சீனாவின் மேற்கு பிராந்தியத்தில் ஊடுருவின் இல்லி ஆற்று பள்ளத்தாக்கிலேயே மலர்கின்றன. இதுதவிர, பேரிக்காய், இலந்தை பழம், பெயர்ஸ் போன்றவை வட மேற்கு சீனாவின் முக்கிய தாவரயினங்களாக திகழ்கின்றன.

அத்துடன், கிழக்கு சீனாவின் அன்ஹூய் மாகாணத்தின் டாங்ஷான் நகரத்தில் சுற்றுலா மற்றும் விளையாட்டு துறை என்பன ஒன்றரக் கலந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட சைக்கிளோட்ட வீரர்கள் ஒவ்வொரு வாரயிறுதியிலும் இங்கு மலையடிவாரத்தில் கூடி சுமார் 40 கிலோமீற்றர் தொலைவிற்கான பந்தய பாதையில் போட்டியில் ஈடுபடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.