கொள்ளையடிக்கச் சென்ற 10 கொள்ளையர் உயிரிழந்த பரிதாபம்!
திட்டமிட்ட காரியம் பதற்றத்தால் சிதறிப் போன சம்பவம் ஒன்று பிரேசிலில் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வங்கியொன்றில் கொள்ளையடிக்கச் சென்ற 10 கொள்ளையர்களில் இலக்கு தவறியதன் காரணமாக அவர்களின் உயிர்களை காவுகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சாவோ பவ்லோவில் உள்ள வங்கி தன்னியக்க பணமாற்று இயத்திரத்தில் இருந்து பணத்தை கொள்ளையடித்துச் செல்ல முற்பட்ட போதே பொலிஸாரால் முறியடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் 25 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் தொடர்புபட்டிருந்ததாக சாவோ பவ்லோவின் பொது பாதுகாப்பு செயலகம் தெரிவித்துள்ளது.
வங்கிக் கொள்ளை முயற்சிக்காக கொள்ளையர்கள் பெரும் ஆயுதங்களை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் பரவலாகும், சாதாரணமாகவும் இடம்பெறும் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களால் அங்கு மக்கள் அச்சத்திலேயே வாழ்கின்றனர்.
ஆனால் இந்த கொள்ளையர்களுக்கு நெஞ்சழுத்தம் அதிகம் என்றே கூற வேண்டும். பொலிஸ் நிலையத்திற்கு அருமையில் உள்ள ஒரு வங்கிப் பணமீட்பு இயத்திரத்திலேயே அவர்கள் கைவைத்துள்ளனர்.
இந்த கொள்ளைக்குழுவினர் வழக்கம் போன்று மிகுந்த முன்னேற்பாடுகளுடன், சம்பவத்துக்கு இறங்கியதாகவும், ஆயதங்களுடன் கூடிய வாகனங்களில் வந்ததாகவும் பொலிஸ் அதிகாரிகளை மேற்கோட் காட்டி உள்ளூர் ஊடகங்கள செய்தி வௌியிட்டுள்ளன.
பதில் தாக்குதல் சம்பவத்தில் பொலிஸார் யாரும் காயமடையவில்லை என்றும் மொத்தமாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்று அறிவிக்கப்படவில்லை.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை