ஈராக் பிரதமர் முதற்தடவையாக ஈரான் விஜயம்!!
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஈராக் பிரதமர் அதெல் அப்துல் மஹ்டி ஈரானுக்குச் சென்றுள்ளார்.
ஈராக் பிரதமராக பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொண்டுள்ள முதலாவது விஜயம் இதுவாகும்.
தலைநகர் தெஹ்ரானை இன்று (சனிக்கிழமை) அடைந்த ஈராக் பிரதமரை, ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி இராணுவ மரியாதையுடன் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களுக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றது. ஈரான் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், தெஹ்ரான் மற்றும் பக்தாத்திற்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்தோடு, பிராந்திய ரீதியில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கவனஞ்செலுத்தப்பட்டது.
தொடர்ச்சியாக ஈரானின் முக்கிய உயர்மட்ட அதிகாரிகளை ஈராக் பிரதமர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை