ஒரே ஒரு பயணிக்காக 5 பணிப்பெண்கள், 2 பைலட்டுடன் பறந்த விமானம்!


                                             PC: The Associate press

லித்துவேனிய நாட்டிலிருந்து இத்தாலிக்குப் பறந்த விமானத்தில், ஒரே ஒரு பயணி பயணம் செய்திருக்கிறார்.
இவருக்காக விமானப் பணிப்பெண்கள் ஐந்து பேரும், இரண்டு பைலட்டுகளும் உடன் இருந்திருக்கிறார்கள்.

சென்ற மார்ச் மாதம் 16-ம் தேதி, இத்தாலி நாட்டுக்குப் பறந்த இந்த விமானம், போயிங் 737-800 வகையைச் சேர்ந்தது. இதில் 188 பேர் வரை பயணம் செய்யலாம். ஆனால், அத்தனை இருக்கைகளும் காலியாக இருக்க, Skirmantas Strimaitis என்பவர் மட்டும் ஜாலியாகப் பறந்திருக்கிறார். இந்தப் புகைப்படம் இப்போது வெளியாகி வைரல் ஆகியிருக்கிறது.

என்ன காரணம்?
லித்துவேனிய நாட்டைச் சேர்ந்த ஒரு குழு, இத்தாலியிலிருந்து நாடு திரும்ப திட்டமிட்டிருந்தது. அவர்களுக்காக, விமானத்தின் ஒட்டுமொத்த இருக்கைகளையும் முன்பதிவு செய்திருந்தார்கள். அவர்களை அழைத்து வர இந்த விமானம் இத்தாலிக்குப் போயிருக்கிறது. திரும்பி வரும்போது டிக்கெட் இருக்காது என்பதால், ஒருவழி டிக்கெட்டுகளை மட்டும் விற்றிருக்கிறார்கள். பொதுவாக , விமானப் பயணம் செய்பவர்கள் ‘ரிட்டர்ன்’ டிக்கெட்டும் சேர்த்துதான் முன்பதிவுசெய்வார்கள். அப்போதுதான் விலை குறைவாக இருக்கும். இந்த விமானத்தில் இருவழி டிக்கெட் இல்லை என்பதால், வேறு யாரும் டிக்கெட் வாங்கவில்லை.

“இரண்டு மணி நேரம் நான் மட்டும் தனியாகப் பறந்தேன். என் வாழ்நாளுக்கும் மறக்க முடியாத அனுபவம்” என தி அஸோஸியேட் பிரஸ்ஸிடம் பேசிய ஸ்கிர்மண்டாஸ் சொல்லியிருக்கிறார்.

உண்மைதான் ப்ரோ!
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.