'நெருப்பைக் குப்பையைப் போட்டு ஒருபோதும் மூடிவிட முடியாது'ங்குற நம்பிக்கை எங்களுக்கு உண்டு!! சீமான்!!

மக்கள்கிட்ட ஒரு மாற்றம் வருது, இளைஞர்கள் பெரிய மாற்றத்தை நோக்கி வந்துட்டு இருக்காங்கன்னு' நாம நினைச்சுட்டு இருக்குற நேரத்துல, காசுதான் வாக்குகளைத் தீர்மானிக்குதுன்னு தெரியும்போது மனசுக்குக் கஷ்டமா இருக்கும்.


நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சில நாள்களில் நடைபெற இருக்கிறது. பிரசாரம் களைகட்டியிருக்கிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காகத் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களத்தில் நிற்கும் தனது வேட்பாளர்களுக்காகத் தமிழகமெங்கும் பம்பரமாகச் சுழன்று வருகிறார்.

தென்காசியில் பிரசாரத்தை முடித்துவிட்டு திருநெல்வேலி, நாகர்கோவில் எனத் தனது அடுத்தடுத்த பயணத் திட்டங்களுடன் பிஸியாக இருந்தவரிடம், 'தேர்தல் காலங்களில் ஏற்படும் அலைச்சல், அதனால் உண்டாகும் மனஉளைச்சல் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, உங்களை எப்படி ரிலாக்ஸாக வைத்துக்கொள்கிறீர்கள்'' என்று கேட்டோம்.

தனக்கே உரிய பாணியில் பேசினார்.

''சுதந்திரப் பசி கொண்ட மக்களை சோற்றுப் பசி ஒண்ணும் செஞ்சுடாது. லட்சிய வெறியோட செயல்படும்போது சோர்வு எதுவும் வராது. ஆனாலும், சில நேரங்கள்ல மனச்சோர்வு வரும். இவ்வளவு உழைச்சு மக்களைச் சந்திச்சு பிரசாரம் பண்ற எங்களைவிட, ரொம்ப ஈஸியா பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிட்டுப் போயிடுறாங்க. அதை நினைக்கும்போது மனசு வலிக்கும். பரீட்சையில படிச்சு மார்க் வாங்குறதுக்கும் பார்த்து எழுதி மார்க் வாங்குறதுக்கும் உள்ள வித்தியாசம்தான் அது.


 'மக்கள்கிட்ட ஒரு மாற்றம் வருது, இளைஞர்கள் பெரிய மாற்றத்தை நோக்கி வந்துட்டு இருக்காங்கன்னு' நாம நினைச்சுட்டு இருக்குற நேரத்துல, காசுதான் வாக்குகளைth தீர்மானிக்குதுன்னு தெரியும்போது மனசுக்குக் கஷ்டமா இருக்கும். 'இதை எப்பிடி சரி செய்யப்போறோம்'னு ஏக்கமா இருக்கும். அதேநேரம், தோற்கடிக்கப்பட்டாலும், 'நாம யாராலத் தோற்கடிக்கப்படுறோம், நம்ம அம்மா, அப்பா, அண்ணன், தம்பிங்ககிட்டதானே'னு நினைச்சு மனசைத் தேத்திக்குவேன். அதுமட்டுமல்லாம இதைத் தோல்வியா நினைக்காம ஒரு தொடக்கமா எடுத்துக்குவேன்.


நீண்டகாலமா கற்பிக்கப்படாத, ஒரு அரசியலை நாம முன்னெடுக்கும்போது, சில இடர்ப்பாடுகள் வரத்தான் செய்யும். தி.மு.க, அ.தி.மு.க போன்ற பெரிய கட்சிகள் மதம்போல மக்கள் மத்தியில கட்டமைக்கப்பட்டிருக்கு. அதுல இருந்து மக்களை மீட்க, மாற்றத்தை ஏற்படுத்த நீண்ட காலமாகும். உடனடியா ஒரு மாற்றம் வந்துடுணும்னு எதிர்பார்க்கிற மனநிலைக்காரன்தான் சோர்ந்துபோவான். 'நாங்க யாரோ நட்ட மரத்திலிருந்து பழம் பறிக்க வரல, அடுத்த தலைமுறைக்கு மரம் நட வந்திருக்கோம்'னு என் மனசைத் தயார்படுத்திக்குவேன்.

'மொத்தப் படிக்கட்டுகளையும் பார்த்து ஏன் மலைச்சு நிக்கணும், நம்பிக்கையோட, முதல் படியில ஒரு அடி எடுத்து வை'னு மார்ட்டின் லூதர் கிங் சொல்ற மாதிரி, 'எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் பயணம்னாலும், ஒரு காலடித் தடத்துலதான் தொடங்கியாகணும்னு தலைவர் பிரபாகரன் சொல்வார். அதேபோல நாங்களும் எங்களோட பயணத்தைத் தொடங்கியிருக்கோம். போன சட்டமன்றத் தேர்தல்ல வாங்குன வாக்குகளைவிட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்ல அதிகமாக ஓட்டு வாங்குனோம். இப்போ நடக்கப்போற தேர்தல்ல இன்னும் கூடுதலா ஓட்டு வாங்குவோம். இவங்களுக்கு ஓட்டுப்போட்டு ஏன் ஓட்டை வீணாக்கணும், ஜெயிக்குற கட்சிக்குப் போடுவோம்னு நினைக்கிற மக்கள் மனநிலையைக் கண்டிப்பா மாத்துவோம்.

எங்க கட்சி வேட்பாளர்கள் தகுதியான நபர்களா இருந்தும், அவங்களை ஏன் ஊடகங்கள் புறக்கணிக்கிறாங்கன்னு தெரியலை. மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களோட நிறுத்திக்கிறாங்க. எங்கள் வேட்பாளர்கள் பெயரைக்கூட சொல்றது கிடையாது. அப்படித் திட்டமிட்டு எங்க கட்சியைப் புறக்கணிக்கும்போது, ஊடகங்கள் மேல கடுமையான கோபம் வருது. அந்த நேரங்கள்ல எனக்கான பொறுப்பும் கடமையும் என்னைப் பதற்றப்படாம வைக்கும்.

நாடாளுமன்றத் தேர்தல்ல 20 பெண்களை வேட்பாளரா நிறுத்தியிருக்கோம். வேற எந்தக் கட்சியும் செய்யாத விஷயம் இது. அதையும் சிலபேர் விமர்சனம் செஞ்சாங்க. என் சமூகக் கடமையைத்தான் நான் செஞ்சேன். அதைப் பாராட்டலைன்னாலும் பரவாயில்லை, ஏன் திட்டணும்? எங்க மேல உள்ள பொறாமை, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியைத் தவிர வேற ஒண்ணும் இல்லை. விமர்சனமும் ஒருவித பாராட்டுதான். 'விமர்சனங்களைத் தாங்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது' என்று சொல்வார் மால்கம் எக்ஸ். இப்படித்தான் எங்கள் மீதான விமர்சனங்களைக் கடந்துவர்றோம்.

'நெருப்பைக் குப்பையைப் போட்டு ஒருபோதும் மூடிவிட முடியாது'ங்குற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. நாங்களும் ஒருநாள் தவிர்க்க முடியாத சக்தியா மாறுவோம். இன்னைக்கு, எந்த மக்களால தோற்கடிக்கப்படுறோமோ, அதே மக்கள் தூக்கிக் கொண்டாடக்கூடிய காலம் நிச்சயம் வரும். அதுவரைக்கும் பொறுமையாத்தான் இருக்கணும். பொறுமைகூட ஒரு போர் உத்திதான். அதையும் தாண்டி, தேர்தல் நேர அலைச்சல், நெருக்கடிகள்ல இருந்து தப்பிக்க, நெருக்கமான நண்பர்கள்கிட்ட தொலைபேசியில பேசுவேன். அவங்க நம்பிக்கையான வார்த்தைகள் சொல்வாங்க. நம்மளை உற்சாகமா வெச்சுக்க அது கண்டிப்பா உதவும்'' என்கிறார் சீமான்.

நன்றி. விகடன்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.