அமெரிக்க வரலாற்றிலே மிகப்பெரிய காப்புறுதி மோசடி!!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் மருத்துவ காப்புறுதித் துறையில் மோசடி நடந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதில் நூற்றுக்கணக்கான நோயாளிகளை ஏமாற்றி 100 கோடி டொலர் மோசடி செய்த சதி அம்பலத்திற்கு வந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட 24 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க நீதித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “’மருத்துவ பொதுக் காப்பீடு காப்புறுதித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முதியவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு மணிக்கட்டு, முழங்கால் மூட்டு மற்றும் பாதிக்கப்பட்டுள்ள உடலின் மற்ற பாகங்களை பெற்றுத் தருவதாகக் கூறப்படும் இத்திட்டத்தில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் ஈர்க்கப்பட்டனர்.

பிலிப்பைன்ஸ் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இயங்கும் ஒரு சர்வதேச இணைய சந்தையின் மூலம் அவர்கள் ஈர்க்கப்பட்டனர்.

இதில் மோசடிக்காரர்கள் கையாண்ட நூதன உத்தி என்னவென்றால் பணத்திற்காக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் நோயாளிகளை நேரடியாக சந்திக்காமலே தேவையான உறுப்புகளைப் பரிந்துரைக்க வேண்டும் என்பதுதான்.

இந்த மோசடி திட்டங்களிலிருந்து கிடைக்கப் பெற்ற வருமானம் முழுக்க முழுக்க சர்வதேச அளவில் நடத்தப்படும் ஷெல் கோர்ப்பிரேஷன்ஸ் எனப்படும் போலி நிறுவனங்களால் சூறையாடப்பட்டன.

இப்பெரும் தொகைகளின் மூலம் அமெரிக்காவிலும், வெளிநாட்டிலும் ஏராளமான ஆடம்பர பங்களாக்கள், விலை மதிப்புமிக்க கவர்ச்சியான கார்கள், உல்லாசக் கப்பல்கள் ஆகியவற்றை அவர்கள் வாங்கியுள்ளனர்.

இவ்வகையான மோசடிகளின் மூலம் அமெரிக்காவில் இயங்கிவரும் மெடிக்கேயார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே பெற்ற நிதித் தொகையே, 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை (100 கோடியே 70 லட்சம் அமெரிக்க டொலர்கள்) எட்டிவிட்டது.

சர்வதேச நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் டெலிமெடிசன் நிறுவன நிர்வாகிகள், மருத்துவ உபகரணக் கருவி தயாரிப்பு நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் மருத்துவர்கள் பலரும் இக்குற்றச்சாட்டில் இடம்பெற்றுள்ளனர்.

இத்திட்டங்களினால் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது” என அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாகாக பொது மருத்துவக் காப்பீட்டை வழங்குவதற்காக 1960களில் தொடங்கப்பட்டதுதான் மெடிகேயார் திட்டம். இது பின்னர், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இராணுவ வீரர்கள் என்று பெருகி 112 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும் ஒரு அமைப்பாக விரிவடைந்துள்ளது.

ஆனால் இக்காப்பீட்டு முறையில் மறைமுகமாக மோசடி நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்காகவே 2007இல் மெடிகேயார் மோசடி தடுப்புப் படை ஒன்று அமைக்கப்பட்டது. இதன்மூலம் 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவில் மோசடி நடந்ததாக கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் மீது வழக்கு தொடரப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.