வாக்குகளை அழித்த தேர்தல் அதிகாரி!
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டிணம் நகரிலுள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு இயந்திரத்தை பரிசோதித்தபோது 125 வாக்குகள் அழிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திராவிலுள்ள 175 சட்டப்பேரவைகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே, பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டு, அதை அதிகாரிகள் சென்று சரி செய்து வந்தனர்.
இந்நிலையில், மசூலிப்பட்டிணம் நகரில் 135/75 எண் கொண்ட வாக்குப் பதிவு மையத்தில் காலையில் இருந்து வாக்குப் பதிவு அமைதியாக நடந்து வந்தது.
இதன்போது வாக்கு இயந்திரத்தை பரிசோதிக்க தேர்தல் அதிகாரி முயன்றார். அப்போது, காலையில் இருந்து பதிவான 125 வாக்குகளும் திடீரென அழிந்து பூஜ்ஜிய நிலைக்கு வந்தது.
இதைக் கண்டு அந்த தேர்தல் அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். அங்கு வாக்குப்பதிவு செய்ய வரிசையில் இருந்த வாக்காளர்களும் இந்த விஷயம் அறிந்து கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பின் அங்கு அந்த தேர்தல் நடத்தும் அதிகாரி இயந்திரத்தை ஆய்வு செய்தபின் அதை மாற்ற உத்தரவிட்டார். ஏற்கனவே வாக்களித்த 125 பேரை திரும்ப அழைத்து வாக்குப் பதிவு செய்ய அனுமதித்தனர்.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி ஜே.உதய பாஸ்கர் கூறுகையில், ‘மின்னணு வாக்கு எந்திரம் முறையாக இயங்குகிறதா என தேர்தல் அதிகாரி சோதனையிட்டபோது, இயந்திரத்தில் பதிவாகி இருந்த 125 வாக்குகளும் திடீரென அழிந்துவிட்டன.
இதையடுத்து, வாக்குப் பதிவு செய்த 125 வாக்காளர்களையும் திரும்ப அழைத்து மீண்டும் வாக்குப்பதிவு செய்ய அனுமதித்தோம். பழுதடைந்த இந்த மின்னணு வாக்கு எந்திரத்துக்கு பதிலாக புதிய இயந்திரம் வைக்கப்பட்டு, அதில் வாக்குப்பதிவு நடந்தது’ என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை