பெண் தேர்தல் அதிகாரி வீட்டில் கைவரிசையைக்காட்டிய கொள்ளையர்கள்!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் துரிதமாக நடந்துவரும் நேரத்தில் சென்னை கொளத்தூரில் தேர்தல் பணிக்குச் சென்ற பெண் அலுவலர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர் வெற்றிவேல் நகர், வி.பி சித்தர் தெருவில் குடியிருப்பவர் அல்லி தாமரை. இவர், வேலூர் மாவட்டத்தில் சிறப்பு துணை கலெக்டராகப் பணியாற்றிவருகிறார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அல்லி தாமரைக்குத் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2-ம் தேதி அரக்கோணம், திருப்போரூருக்கு அவர் சென்றார். வீட்டில் யாருமில்லை.
இந்த நிலையில், வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை இன்று வேலைக்கு வந்த பணியாட்கள் பார்த்தனர். உடனடியாக அல்லிதாமரைக்குப் போனில் அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதையடுத்து, கொளத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்தனர். இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது யார் எனக் கண்டறிய அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சப்-கலெக்டர் அல்லி தாமரை வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 120 சவரன் நகைகள், லட்சம் ரூபாய், 3 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போனதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள்கள் நோட்டமிட்டு இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துவருகிறோம். மேலும், கொள்ளை நடந்த வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட கைரேகைளைக் கொண்டு பழைய குற்றவாளிகளின் கைரேகைளோடு ஒத்துப்போகிறதா என்பதையும் ஆய்வு செய்துவருகிறோம்" என்றனர்.
தேர்தல் பணிக்குச் சென்ற பெண் தேர்தல் அலுவலர் வீட்டிலேயே கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் கொளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை