மெட்ராஸ்: என் கதையை திருடியதற்கு நன்றி சி.வி.குமார் - பத்திரிகையாளர் காட்டம்!!

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் சிவி குமார். அவர் தயாரித்த படங்கள் எல்லாம் வித்தியாசமான கதைக்களம் கொண்டவை. ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த சிவி குமார், இரண்டாவதாக இயக்கியிருக்கும் படம் Gangs of மெட்ராஸ். இந்த படத்தின் கதை தன்னுடையது என பத்திரிகையாளர் சிவராமன் குற்றம்சாட்டியுள்ளார்.


இதுகுறித்து அவர், நன்றி சி.வி.குமார். பெயரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்காமல் அனுமதியும் பெறாமல் எனது 'மாஃபியா ராணிகள்' நூலின் ஒரு போர்ஷனை எடுத்து ஆண்டதற்கும் அப்பகுதிக்கு திரைவடிவம் கொடுத்ததற்கும், உண்மையில் அது ஒரிஜினல் சரக்கல்ல.பத்திரிகையாளர் ஹுசைன் சைதி எழுதிய இரு ஆங்கில நூல்களையும் 1980 முதலான ஆங்கில பத்திரிகைகள் ப்ளஸ் இங்கிலீஷ் நியூஸ் பேப்பர்ஸ் செய்திகளையும் அடிப்படையாக வைத்து டிராமடைஸ் செய்யப்பட்ட டிரான்ஸ்கிரியேஷனே
தினகரன் நாளிதழின் ஞாயிறு இணைப்பான 'தினகரன் வசந்தம்' பத்திரிகையில் 97 வாரங்களுக்கும் மேல் வெளியாகி 'சூரியன் பதிப்பகம்' வழியே நூலாகவும் வெளிவந்திருக்கிறது.
வருத்தம் ஏதும் இல்லை. உள்ளூர மகிழ்ச்சிதான். ஏனெனில் ஹுசைன் சைதி நூலில் இருக்கும் செய்தியைவிட அதை டிரமடைஸ் செய்த எனது வெர்ஷனையே வசனங்கள், ப்ளாக்ஸ் முதல் பயன்படுத்தி இருக்கிறீர்கள், மும்பைக்கு பதில் மெட்ராஸ் என களம் மாற்றி. அந்த வகையில் எனது கிரியேட்டிவிட்டியை (!) மதித்து மரியாதை செய்ததற்கு நன்றி.

நல்லா இருங்க, நீங்களும் பெயர் குறிப்பிடாமல் உங்களுக்கு ஓர்க் பண்ணி கொடுத்த எனது நண்பர்களும், இந்தப் படம் ஏன் பெரும் வெற்றி அடையாமல் போனது என்பதை உங்களை எப்போதாவது சந்திக்கும்போது விளக்குகிறேன். பிகாஸ், இன்ஸ்ஃபையர் (காப்பி ) ஆகி வாந்தி எடுப்பவர்களை விட மென்று தின்றவர்களுக்கு பிசிறின்றி செரிமானம் ஆகும். அதற்குள் இன்னொருவரின் உழைப்பை கமுக்கமாக சுரண்டாமல் இருங்கள். தொடர் வாந்தி பெரும் நோயின் அறிகுறி.

சி.வி.குமாருக்கு கோஸ்ட் ரைட்டர்ஸாக இருக்கும் எனதருமை நண்பர்களே, தொடரட்டும் உங்கள் சேவை, சிபியா டோனில் வலம் வரும் ஹாலிவுட் கேங்க்ஸ்டர் படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால், ஆங்காங்கே துருத்தி நிற்கும் குறைகளைக் கடந்து இப்படத்தை ரசிக்க முடியும். வன்முறை அதிகம் என்பதால் ஒன்லி 18  என பதிவிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.