ஊட்டியில் தொடங்கியது 133-வது குதிரைப் பந்தயம்!!
சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் கோடை சீசனில் ஊட்டியில் குதிரைப் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான 133-வது குதிரைப் பந்தயம் தற்போது தொடங்கியுள்ளது. ஜூன் மாதம் வரை இந்தக் குதிரை பந்தயம் நடக்கவுள்ளது. ஊட்டி குதிரைப் பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப்பாயும் பந்தயக் குதிரைகள் பெங்களூரு, சென்னை, புனே உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500 பந்தயக் குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
26 குதிரைப் பயிற்சியாளர்கள் மற்றும் 50 ஜாக்கிகள் கலந்துகொண்டுள்ளனர். ஊட்டியில் நேற்று குதிரைப் பந்தயம் தொடங்கிய நிலையில், இதை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். முதல் நாளான நேற்று 6 போட்டிகள் நடைபெற்றன. இதில் முதலிடம் பிடித்த குதிரைகளின் உரிமையாளர்கள், ஜாக்கிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஊட்டியில் தொடங்கியுள்ள குதிரைப் பந்தயத்தில் முக்கிய போட்டிகளான ‘தி நீல்கிரிஸ் 1000 கீனிஸ்’ கிரேட் 3 போட்டி வரும் 21-ம் தேதியும், ‘தி நீல்கிரிஸ் 2000 கீனிஸ்’ கிரேட் 2 போட்டி 28-ம் தேதியும், ‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்’ கிரேட் 1 போட்டிகள் மே மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. குதிரைப் பந்தயத்தின் முக்கியப் போட்டியான ‘நீலகிரி தங்கக் கோப்பை’ போட்டி மே மாதம் 26-ம் தேதி நடைபெற உள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை