அதகளப்படுத்தும் 'ரியோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: ரசிகர்கள் உற்சாகம்!!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கனா பட வெற்றியை தொடர்ந்து யூடியூபில் பிரபலமான பிளாக் ஷீப்  புகழ் கார்த்திக்  இயக்கும் படத்தைத் தயாரித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சின்னதிரை தொகுப்பாளர் ரியோ ஹீரோவாக நடித்துவரும்  இப்படத்திற்கு 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.


rio
ஆர்ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத், ராதா ரவி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதில் ரியோவுக்கு ஜோடியாக ஷெரின் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து, மே மாதம் வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. அதில் பல செய்தி தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ் போடப்பட்டுள்ளது. மேலும் இதில் யூடியூப் மூலம் பிரபலமானவர்கள் ஒன்று இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

No comments

Powered by Blogger.