பிராணிகளுக்கு பாதுகாப்பளிக்கும் சவுதி அரேபிய தொண்டு நிறுவனம்!

சவுதி அரேபியாவில் செல்லப்பிராணிகளை தத்தெடுப்பது தற்போது இலகுவான விடயமாகிவிட்டது.
பாதுகாப்பான கைகளில் விலங்குகளை ஒப்படைக்கும் ஒரு உள்ளூர் தனியார் தொண்டு நிலையத்தின் தலைமையிலான முன்முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தலைநகர் ரியாத்தில் வசித்துவரும் பாலஸ்தீன பெண்ணொருவர் அவருடன் இணைந்த சில தொண்டர்களுடன் இந்த தொண்டு நிறுவனத்தை வழிநடத்தி வருகின்றார்.

கடந்த ஐந்து வருடங்களில் சுமார் 80 தெருப் பூனைகளையும், 30 உரிமையாளரற்ற நாய்களையும் பாதுகாப்பாக மீட்டு வளர்த்து வந்துள்ளார். இது பாதிக்கப்பட்ட விலங்குகளை பாதுகாக்கும் எஸ்.ஓ.எஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இதன்மூலம் விலங்குகள் மீது கருணை மற்றும் இறக்கத்தை செலுத்துங்கள் என்ற செய்தியை அவர் பரப்புரை செய்து வருகிறார்.

தொண்டு நிறுவனத்தின் நிறுவுனரான Soheir al-Chalout கூறுகையில், சவூதி அரேபியாவில் தன்னார்வத் தொண்டு கலாச்சாரத்தை ஆதரிக்கவும், பல முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் அதனை ஊக்குவிக்கவும் தான் முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விலங்கு மருத்துவ முகாம் ஒன்று கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரை ஓயாசிஸ் செல்லப்பிராணி மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது 16 க்கும் மேற்பட்ட விலங்குகள் பல ஆர்வலர்களால் செல்லப்பிராணிகளாக தத்தெடுக்கப்பட்டுள்ளன.

செல்லப்பிராணிகளுக்கு, உதாரணமாக பூனைகளுக்கு எவ்வாறான அடிப்ப​டை பாதுகாப்பை வழங்க வேண்டும் மற்றும் மருத்துவ பரிசோதனைகளை எவ்வாறு வழங்க வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு செயலமர்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.

அத்துடன் செல்லப்பிராணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும், அவற்றை கைவிட மாட்டோம் என்ற உறுதிமொழியுடன் உரிமையாளர்களிடம் உத்தரவாதப் பத்திரங்களில் கையொப்பமும் பெறப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனத்தினால் அதிகளவு விலங்குகளுக்கு பாதுகாப்பை வழங்க முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து அவற்றை பாதுகாப்பான கரங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.