தமிழில் வலுவாக கால் பதிக்க இந்த படம் காரணமாக இருக்கும் - இனியா!!


வாகை சூடவா மூலம் தமிழில் அறிமுகமானவர் இனியா. அதைத் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான பொட்டு படத்தில் இனியாவின் வேடம் பலரால் பாராட்டப்பட்டது. தமிழைத் தவிர மலையாளம் கன்னடம் என்று மும்மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் இனியாவை சந்தித்தோம். தமிழில் ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்க சாய் கிருஷ்ணா இயக்கத்தில் காபி என்ற படத்தில் நடிக்கிறேன். அதிரடியான சத்யபாமா என்ற போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கிறேன். என் திறமையை நிரூபிக்க ஒரு படமாக இது இருக்கும். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். நானும் அடுத்த லெவலுக்கு போகக் கூடிய வலுவான படமாக இருக்கும். தமிழில் வலுவாக நான் கால் பதிக்க இந்த படம் காரணமாக இருக்கும். ஷூட்டிங் சென்னையிலும் பெங்களூரிலும் நடந்தது.  மலையாளத்தில் பிரபல இதக்குனர் ஷாஜி கைலாஷ் தயாரிப்பில் கிரண் என்ற இயக்குனர் இயக்கத்தில் பிருதிவிராஜின் அண்ணன் இந்திரஜித் நடிக்கும் "தாக்கோல்" என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். பேமிலி சப்ஜெக்ட். கோவா கேரளாவில் ஷூட்டிங் நடக்குது. இன்னொரு சந்தோஷம் என்னன்னா... கன்னடத்து சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமாரோட "துரோணா" என்ற படத்துல அவருக்கு ஜோடியா நடிச்சிட்டிருக்கேன். கல்வியை மையப்படுத்தி உருவாகிற சப்ஜெக்ட். எனக்கு ரொம்ப நல்ல பேரை கொடுக்கும்.  தமிழில் தான் ஒரு சின்ன கேப் விழுந்திருச்சி. அது காபி படத்தின் மூலம் சரியாயிடும். மலையாளத்தில் நான் மம்முட்டி சாரோட நடிச்ச "பரோல்" என்ற படத்துக்காகவும் "பெண்களில்லா" என்ற படத்துக்காகவும் சிறந்த இரண்டாம் கதாநாயகி விருதை கேரள பிலிம் கிரிட்டிக்ஸ் வழங்கியது எனக்கு ரொம்பவும் பெருமையா இருக்கு. 2018 எனக்கு ரொம்பவும் சிறப்பா இருந்தது... 2019 இன்னும் சிறப்பா இருக்கும்ன்னு நம்பறேன் என்றார் இனியா.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.