சுந்தர். சியின் ‘இருட்டு’: ரிலீஸ் அப்டேட்!

சுந்தர். சி திரைப்பட இயக்கத்தில் கவனம் செலுத்திவந்தாலும் நடிகராகவும் தன்னை நிரூபித்துவருகிறார். தற்போது அவர் நடிப்பில் ‘இருட்டு’ என்ற புதிய திரைப்படம் உருவாகிவருகிறது சுந்தர்.சி தற்போது விஷால், தமன்னா நடித்து வரும் பெயரிடப்படாத படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக அஸர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப்பின் சுந்தர் சி நடித்து வரும் திரைப்படம் 'இருட்டு'. முகவரி, காதல் சடுகுடு, தொட்டி ஜெயா, நேபாளி போன்ற படங்களை இயக்கிய துரை இந்த படத்தை இயக்கிவருகிறார். இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவிருப்பதாக படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. சுந்தர் சி, தன்ஷிகா, விமலா ராமன், விடிவி கணேஷ், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இரும்புத்திரை படத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் திரைக்கதை எழுதியுள்ள இந்த படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.

No comments

Powered by Blogger.