பௌத்த குருமார் நீதிமன்றம் செல்வதை தான் விரும்பவில்லை – நீதியமைச்சர்!!

பௌத்த குருமார் நீதிமன்றம் செல்வதை தான் விரும்பவில்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். எனவே, பிக்குமார்களுக்கு தனியாக நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் தனக்கு எந்தவித உடன்பாடும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார். இரத்தினபுரி போதிராஜாராமய விகாரையின் நான்கு மாடிக் கட்டடத்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் அமைச்சராக பதவியேற்ற பின்னர் மகாநாயக்கர்களிடம் ஆசிபெற சென்ற போது பௌத்த குருமார்களுக்கு தனியாக நீதிமன்றம் ஒன்றை அமைக்குமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர். எனினும் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. உன்னதமான புனிதம் மிக்க பெளத்த மத போதகர்களான பௌத்த குருமார்களை சாதாரண நீதிமன்றத்தின் வாசற்படியைக் கூட மிதிக்க வைக்க நான் விரும்பவில்லை. எனினும், சாதாரண நீதிமன்றங்களில் பௌத்த குருமார் ஆஜராவதற்கு தனியான ஒரு தினத்தை ஒதுக்கிக் கொடுக்குமாறு கேட்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க மத்திய, வடமேல் மாகாணங்களில் தனியான ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஏனைய மாகாணங்களிலும் அதற்குரிய ஒழுங்குகளை செய்துகொடுப்பேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.