முதல் டெஸ்ட் டியூப் பேபிக்கு ஆண் குழந்தை!!!


                                             Photo Courtesy : The Economic Times
சீனாவின் முதல் டெஸ்ட் டியூப் பேபியான ஜெங் மெங்ஷூவுக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளது.
 சீனாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை ஜெங் மெங்ஷூ. திருமணமான இவருக்கு பிரசவ வலி எடுத்ததால், சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள பெக்கிங் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பிரிவு மருத்துவமனையில், கடந்த திங்கள்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு உடனடியாக சிசேரியன் அறுவைசிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க டாக்டர்கள் முடிவுசெய்தனர். மருத்துவர் ஜாவோ யங்யு என்பவர் அறுவைசிகிச்சை மேற்கொண்டார். காலை 8 மணி 34 நிமிடத்தில் ஜெங் மெங்ஷூக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 3 கிலோ 850 கிராம் எடை இருக்கிறது.

பிரசவம் குறித்து மருத்துவமனையின் டீன் கிவாய் ஜீ கூறும்போது, `முதல் டெஸ்ட் டியூப் பேபிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, சீன வரலாற்றில் மிகவும் முக்கியமானது. இது, மானுட இனப்பெருக்கத்தின் மற்றொரு மைல்கல்லாகும்' என்றார். மேலும் அவர் கூறும்போது, `சீனாவின் சோதனைக் குழாய் தொழில்நுட்பம் உலக அளவில் முன்னணியில் உள்ளது' என்றார்.

டெஸ்ட் டியூப் பேபியான ஜெங் மெங்ஷூ, 1988-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி, சங் லிங் மருத்துவமனையில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையத்தில், பிரபல மருத்துவர் ஷாங் லிசு மேற்பார்வையில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.