ஓட்டு போட்ட பின் வடிவேலு கமண்ட்!!

இந்தத் தேர்தலுக்குப் பிறகு நல்லா மழை பெய்யும்; மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்'' என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி பொதுமக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்துவருகின்றனர். பிரபலங்களும், அவர்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்துவருகின்றனர். அந்த வகையில், சென்னை சாலிகிராமத்தில் நடிகர் வடிவேலு தனது வாக்கைப் பதிவுசெய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தேர்தல், திருவிழாவுக்கு சமம். மக்கள் நல்லா யோசிச்சு, சிந்திச்சு ஓட்டு போடணும்னு சொல்ற நேரம் இது கிடையாது. ஏன்னா முடிஞ்சுபோச்சு. பூத் மூடும்போது வரலாம்னு இருந்தேன் கடைசி ஆளா. மக்களுக்கு நம்ம சொல்லவேண்டிய அவசியமேயில்லை. அவர்கள் தெளிவா இருக்கிறார்கள். உலகம் உள்ளங்களைக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு பிள்ளையின் கைக்குள் வாட்ஸ்அப் வந்துவிட்டது.

யாருக்கிட்டயும் கேட்டு ஓட்டுபோடவேண்டிய அவசியம் கிடையாது. இளைஞர்கள் தெளிவாக, வீட்டுல யாருக்கு ஓட்டுப்போடணும்னு சொல்கிறார்கள். வித்தியாசமான தேர்தல் இது. எலெக்‌ஷன் முடிந்தபிறகு, கடுமையான மழை பெய்யும்னு நினைக்கிறேன். காரணம், இந்தத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் எல்லாருக்கும் விடிவு காலம் பிறக்கும். மக்கள் எல்லோரும் ஆரோக்கியமா, கண்ணீர் சிந்தாம இருக்க வேண்டும். யார் வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்'' என்றார்.  அவரிடம், இந்த முறை பிரசாரம் செய்யவில்லையே... என்ன காரணம் எனக் கேட்டதற்கு, ``நான் நல்லா இருக்குறது உங்களுக்குப் பிடிக்கலையா?' என்று கிண்டலாகப் பதிலளித்தார். `தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை நல்லா இருக்கு'' என்று தெரிவித்தார்.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.