விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய ராதிகா ஆப்தே?!

Clinique விளம்பரத்தில் நடித்ததால் ராதிகா ஆப்தே சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
திரைத்துறை பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் விளம்பரத்தில் நடிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் சில நேரங்களில் விளம்பர படங்களால் சர்ச்சையில் சிக்க வாய்ப்புள்ளது. விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்களோ, விளையாட்டு வீரர்களோ தான் நடிக்கும் விளம்பரம் பற்றிய தெளிவான புரிதல் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

fffbadf
புரிதல் இல்லாமல் ஒரு விளம்பரத்தில் நடித்து, அந்த பொருளின் மூலம் எதாவது பாதிப்பு ஏற்பட்டால், பின்னர் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அப்படியான பிரச்சனையில்தான் ராதிகா ஆப்தே சிக்கியுள்ளார்.
fb
Clinique எனும் ஹேர் டானிக் விளம்பரத்தில் தோன்றிய ராதிகா, நரைத்த முடிகள் 90 நாட்களில் மாறிவிடும் என அதில் உறுதி அளித்துள்ளார். அறிவியல் ரீதியாக அதற்கான சாத்தியக் கூறுகள் அந்த டானிக்கில் இல்லை. இதுகுறித்து ராதிகா ஆப்தேவிடம் கேள்வி எழுப்பியுள்ளது ASCI (இந்திய விளம்பர நியமங்கள் குழு).
jahsg
புதிதாக நரை முடி வளர்வதை தடுத்திடுங்கள். 90 நாட்களில் நரை முடி வளர்ச்சி நின்றுவிடும் என ராதிகா அந்த விளம்பரத்தில் கூறியிருப்பது கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இதுகுறித்து ராதிகா ஆப்தே தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை.
இதுபோன்ற சர்ச்சை பாலிவுட் திரையுலக பிரபலங்களுக்கு புதிதல்ல, அஜய் தேவ்கன், டைகர் ஷெரோப், கஜோல், அலியா பட என பலரும் ASCI விதிமுறைகளை மீறி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.