காணமால் போன போவளை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனின் உடல் மீட்பு!!

நாவலபிட்டி கலபொட நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்று காணமால் போன பாடசாலை மாணவனின் உடல் இன்று காலை 10.30 மணியளவில் கடற்படையினரின் உதவியுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கம்பளை, போவளை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு நேற்று மாலை தனது காதலியுடன் குறித்த மாணவர் அங்கு நீராட சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த மாணவனின் பாதனி கீழே விழுந்துள்ளதையடுத்து, அதனை எடுக்கச் சென்ற மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை காணாமல் போயிருந்த மாணவனின் சடலத்தை தேடும் நடவடிக்கை இடம்பெற்று வந்த நிலையில் இன்று காலை நீர்வீழ்ச்சின் ஆழமான குழிப் பகுதியில் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது மரண பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.