மீண்டும் முதலிடத்திற்கு கெத்தாக முன்னேறியது சென்னை!!
மீண்டும் முதலிடத்திற்கு கெத்தாக முன்னேறியது சென்னை; புதிய புள்ளி பட்டியல்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான அசத்தல் வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐ.பி.எல் டி.20 தொட
ரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
56 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் 12வது போட்டியான இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணிக்கு அம்பத்தி ராயூடு 1, சேன் வாட்சன் 13 மற்றும் கேதர் ஜாதவ் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்ததால் 27 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த தல தோனி - சின்ன தல ரெய்னா கூட்டணி சென்னை அணியை சரிவில் இருந்து மீட்டு பொறுமையாக ரன் சேர்த்தது.
இதில் ரெய்னா 36 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும் கடைசி வரை ஆட்டமிழக்காத தல தோனி 46 ரன்களில் 4 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள சென்னை அணி 175 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் மூன்று முக்கிய வீரர்கள் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், பின்வரிசையில் வந்த ஸ்டீவ் ஸ்மித் 28 ரனகளும், ராகுல் த்ரிபாதி 39 ரன்களும், அதிடியாக விளையாடிய ஸ்டோக்ஸ் 46 ரன்களும், ஜோஃப்ரா ஆர்சர் 24 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் கடைசி ஒரு ஓவருக்கு 12 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.
போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரை வீசிய பிராவோ அந்த ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தது மட்டுமல்லாமல் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான இந்த வெற்றியின் மூலம், இந்த தொடரில் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
அணி போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளி
1 சென்னை சூப்பர் கிங்ஸ் 3 3 0 6
2 ஹைதராபாத் 3 2 1 4
3 கொல்கத்தா 3 2 1 4
4 டெல்லி 3 2 1 4
5 பஞ்சாப் 3 2 1 4
6 மும்பை இந்தியன்ஸ் 3 1 2 2
7 ராஜஸ்தான் ராயல்ஸ் 3 0 3 0
8 பெங்களூர் 3 0 3 0
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை