2009பின்னர் சாதி,மதம்,சமூகம் ரீதியாக பழிவாங்கும் தமிழ் அரசியல் வாதிகள்!!

அண்மைக்காலங்களில் சைவ மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு இடையே ஒரு முரண்பாட்டை உருவாக்கும் வேலையை சிலர் செய்து வருகிறார்கள் .அதன் தொடர்ச்சியாக நேற்று யாழ்ப்பாணம் செம்மணி நாவற்குழி பகுதி சைவ / கிறிஸ்தவ மத சர்ச்சைகளின் மையமாகி இருக்கிறது

செம்மணியில் மிக அண்மையில் இரவோடிரவாக சிவலிங்கம் முளைத்திருந்த நிலையில் திடீரென நேற்றிரவு இரு இடங்களில் கத்தோலிக்க வாசகங்கள் அடங்கிய பேனர்கள் நாட்டப்பட்டிருந்தது. இதில் ஒன்று செம்மணிச் சந்தியிலும் இரண்டாவது குறுக்கு வீதியிலும் நாட்டப்பட்டிருந்தது.

இந்த சம்பவங்கள் சட்டவிரோதமாக அந்த பகுதியில் உருவாக்கப்பட்ட சிங்கள குடியேற்றம் அதோடு இணைந்த வகையில் கட்டப்பட்டு வரும் புத்த விகாரை போன்ற சர்சைகளை பின் தள்ளி இருக்கிறது .வட மாகாணசபை இயங்கிய பொது இந்த விகாரைக்கு எதிராக வழக்கு தொடர பட்டு இருந்தது .ஆனால் தமிழரசு கட்சியின் பிரதேசபை பதவியேற்ற பின்னர் அந்த வழக்கு வாபஸ் வாங்க பட்டு இருக்கிறது.அதை தொடர்ந்து இந்த விகாரை வேகமாக கட்டப்பட்டு வருகிறது .இந்த விவகாரங்கள் ஊடகங்களிலும் , சமூக தளங்களிலும் போதிய அக்கறை செலுத்தப்படவில்லை . அதை பற்றி யாருமே அவதானம் செலுத்தவில்லை

ஆனால் திடீரெண்டு சிவலிங்கம் முளைப்பதும் கத்தோலிக்க வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைப்பதும்  அது தொடர்பாக சமூக தளங்களில் கருத்துமோதல்களை உருவாக்குவதும் ஏன் ? உண்மையில் இதற்க்கு அவசியம் என்ன |? இதன் பின்னணி யார் ? 2009களுக்கு பின்னர் சாதி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் , மத ரீதியாகவும் பிளவுகளை ஏற்படுத்த பலர் முயற்சித்து வருகிறார்கள் .இவர்களுக்கு மறைமுகமாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் இந்தியா துணை தூதுவராலயம் அடைக்கலம் கொடுத்து வருகிறது .இலக்கியவாதிகள் என்கிற பெயரிலும் இடதுசாரிகள் என்கிற பெயரிலும் இந்தியா ஆமியோடு சேர்ந்து இயங்கி தப்பி ஓடிய பலர் மீண்டும் களம் இரக்கப்பட்டு இருக்கிறார்கள்

இவ்வாறானவர்களை சரியான முறையில் அடையாளம் காண வேண்டியது மிக  அவசியமானதும் அவசரமானதுமாகும்.

படம் 1 :  நாவற்குழி புத்த விகாரை
படம்  2: கிறிஸ்தவ பேனர்கள்
படம் 3 : நாவற்குழி சிவலிங்கம்
Powered by Blogger.