பொலிசை தாக்கிய பொலிஸ்!!

மிரிஹான பொலிஸ் நிலையத்தினுள் தமது பிரிவின் இயக்குனர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் தன்னை தாக்கியதாக 119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் அஸ்வெல்லகே சமன்சிறி குற்றம்சாட்டியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த குறித்த பொலிஸ் அதிகாரி தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

நேற்று (வெள்ளிக்கிழமை)  பகல் 12.30 மணியளவில் மிரிஹானயில் உள்ள பொலிஸ் மா அதிபர் கட்டளை தகவல் பிரிவின் அலுவலகத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் தன் மீதான குற்றச்சாட்டை மறுப்பதாக பொலிஸ் அத்தியட்சகர் அமைத்து குணரத்ன தெரிவித்துள்ளார். தான் அவ்வாறு யார் மீதும் தாக்குதல் நடத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

எனினும் பொலிஸ் அத்தியட்சகர் அமித் குணரத்ன தகாத வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது சம்பந்தமாக கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.