யாழ் மீசாலையில் இந்திரஜித் துாக்கில் தொங்கி தற்கொலை!! 


யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 தென்மராட்சி மீசாலை பகுதியைச் சேர்ந்த இந்திரஜித்(23) இன்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் சடலம் சாவகச்சேரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 மருத்துவ பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இளைஞனின் மரணத்தினால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அண்மைய நாட்களாக இலங்கையின் பல பகுதிகளில் அவலச் சாவுகள் அதிகரித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.